எனக்குப் பிறகான 
உன் அடையாளங்கள் 
எதுவென அணிவகுத்த பின், 
உருவாக்கிய மெளனத்தில் 
முப்பது மில்லிக் கனவுகளும் 
இரண்டு துண்டு புன்னகையும்
குளிரூட்டப்பட்ட அறையும்
தூண்டப்படாத காமும்
புரண்டு படுக்கும் நோய்மையும்
போதும் இல்லையா உனக்கு?

பாதப் பள்ளத்தில் நழுவிய
மீன் குஞ்சுகளை
உனக்கும் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்
கனவென்று உடல் திருப்பாதே
இப்போதும் லிப்டில் கீழிறங்குவதற்கு
ஏழாவது எண்ணை அழுத்துவதாய்
காட்சி வருகிறது...  

How Much Do You Love Me?

Tuesday, August 18, 2015 | 0 comments »

வீடு வந்து பேயோட்டும் மூன்று சுருட்டை
கொத்தாய் பற்றிப் புகைக்கும் முனியென
எனக்கென்று தயாரித்து வைத்திருக்கும்
உன் பிரத்யேகக் கண்களை இப்போது அழை.
பக்கத்து வீட்டுக்காரி கவனிக்கச் சொன்ன
டேனிலியாவின் கருவிழி உள் உருள்வது
அனிச்சையாய் நினைவிற்கு வருகிறது
How Much Do You Love Me?

மணற் கடிகாரத்தில் கவிழும்
துகள்கள் கொண்டு
காலத்திற்கு மதில்கள் கட்டுகிறேன்
குவியல்களாக மேடேறும்
பொழுதுகள் மதில்களாக மறுப்பது
பனிக்கால காற்றில் உரைக்கிறது
சைரன் விளக்குகளில் மிஞ்சிய
நீல சிவப்பு நிறத்தை
குவியல்களெங்கும் பூசுகிறேன்
சாயங்கள் உதிரத் தொடங்குகையில்
விடியலை புறக்கணிக்கும்
திருநங்கையின் புறங்கால்களில்
நொடிகள் நிர்ணயிக்காத
சமிக்ஞை கிடைக்கிறது
பச்சை நிறத்தில்...

Blogger Wordpress Gadgets