விடைபெறுதலின் ஞாபகார்த்தமாய்
முத்தமொன்றும்
முடிவுறா கவிதையொன்றும் கேட்டாள்

மல்லிகைப்பூவின் இதழொத்த
கரத்தினை சற்று இறுக்கிப்பிடிக்க
இதழசுழித்து பறித்துக்கொண்டாள்

பிரிதலின் நிமித்தமாய்
கொஞ்ச நேரம் பேசியிருக்க அழைக்கையில்
அழுதுவிடுவேன் என நழுவினாள்

தலை தாழ்த்தியே கிடக்கும்
முகத்தினை என்னைப்பாரென கேட்க
உடைந்து கிடந்த கண்ணீரைத் துடைக்கிறாள்

பின்னெப்பொழுதாவது அலைபேசியில்
பேசுவதற்கு சம்மதிப்பாயவென கேட்க
என்னை விட்டுடாவென கெஞ்சத்துவங்கினாள்

காத்திருப்பின் இடைவெளிகள் தீர்ந்துவிட,
வந்து சென்றவளின் ஒருவரிக்கவிதை
அவள் என்பவள் எண்ணத்தில் அடங்காதவள்!

மழை!

Monday, October 29, 2012 | 0 comments »

விளக்கொளியில்
மழை அழகு

ஓலைக்குடிசையில்
விழுந்தோடும் மழையோசை

மெல்லிசை!

வேலியோர செடிகொடிகள்
நின்றாடும் மழையில்
அழகு!

சடசடவென கலையும்
பறவைகளின் இறக்கையடிப்பு
மழையின் பின்னணி இசை!

துணிகாயும் கயிற்றில்
அவிழ்க்காத வெள்ளை ரிப்பன்
மழையில் அழகு!

ஈக்களால் இம்சிக்க
தலையசைக்கும்
மாட்டின் மணியோசை
மழையில் அழகு!

தாய்க்கோழியின்
இறக்கை கதகதப்பில்
குஞ்சுகளின் முணுமுணுப்பு
மழையில் மழலை மொழி!

இலைகள்
தேக்கி வைத்திருக்கும்
மழைப்பூக்கள்
உதிர்க்கையில் அழகு!

கருவேப்பிலை மரத்தில்
நனையும் குயிலின்
சிகப்பு கண்கள் அழகு!

நீ வருவதாய் சொல்லியிருந்த
தேதியினை நாட்குறிப்பின்
பக்கங்களில் தேடுகிறேன்

சின்ன சின்ன கட்டங்களாய்

கட்டங்களுக்குள் குறிப்புகளாய்
மாதத்திற்கு ஒரு பக்கம் கொண்ட

நாட்குறிப்பு அது! அதில்
உன் வருகைக்கான அடையாளமானது
இதயவடிவில் குறிக்கப்பட்டிருக்கிறது

இதயமோ
வெவ்வேறு வடிவங்களை கொண்டதாய்
மனநிலையை சித்தரிப்பதாய் இருக்கிறது

அம்பு தோய்த்து, அம்பு இல்லாமல்
குருதி வடிந்து, இதய அளவில் கிழித்து
ஒவ்வொரு கட்டங்களும் ஒவ்வொரு மனநிலை

கண்கள் தீட்டப்பட்டிருக்கிறது
உதடுகள் வரையப்பட்டிருக்கிறது
ஒற்றைக்காதும் கூந்தலும் வரையப்பட்டிருக்கிறது

அழுக்கேறிய
கைரேகைகளின் அழுத்தம் தெரிகிறது
துளித்துளியாய் நீர்பட்டு தன்மையிழந்திருக்கிறது

நல்லவேளை நீ வரவில்லை...


வார்த்தைகளற்ற பொழுதுகளில்
புறக்கணிப்பில் இழந்த சுயத்தை
மீட்பதற்கு தயார் படுத்துகிறேன்

நெஞ்சோரம் கூடுகட்டி நகம்கீறி
வலியுணர்த்தும் நேசப்பறவைகளின்
எண்ணிக்கை கூடுவது கண்டு

வற்றிய குளத்தில் விழும் ஒளியால்
செதில் செதிலாய் பிளப்பது போல
பிம்பங்கள் பட்டுப்பட்டு வெடிக்கிறேன்

கானலின் நீர் குடித்து தாகம் தீர்த்திட
அலையும் பாலைவன தேகத்தை
குளிக்க தயார் படுத்துகிறேன்

புள்ளிகளாய் விழும் துளிகளின் துவாரங்கள்
கள்ளிச்செடியின் கூரிய முட்களாய்
உடல் தொட்டு உயிர்குடிக்க

இயலாமையின் அறியாமை கண்டு
தடுமாறும் உதடுகள் வார்த்தை உதிர்க்காமல்
புன்னகையால் தையலிடுகிறேன்!


எப்போதும் சிரித்துக்கிடக்கும்
உதட்டின் ஈரப்பசையை அதன் நேசத்தை
புகைப்பட கோப்புகளுக்குள் தேடுகிறேன்

எதிலும் அடைபடாத நிகழ்வுகளை,
நினைவுகளை, அடுப்படியிலிருந்து
அழைக்கும் குரலோசையை கேட்கிறேன்

உணவருந்தலில் வாங்கிச்செல்லும்
கடைசி வாய் சோற்றில் மிஞ்சிய
விரலின் சுவை வேண்டுகிறேன்

தாமதத்தின் நிமிடங்களில்
போர்தொடுக்கும்
விழிகளை வருடிக்கொடுக்கிறேன்

ஒவ்வொரு மழையிலும்
நனைய அழைக்கையில் வைத்துக்கொள்ளும்
முகபாவனையை சுவர்களில் காண்கிறேன்

கடந்து வந்த நாட்களிலெல்லாம்
ஒன்றாய் வாழ்ந்துப்போன
கடந்த காலத்தில் குடியிருக்கிறேன்

எச்சில் பதியாதொரு முத்தத்தை
ஊர்கூடி கிடத்தியிருக்க,
அனுமதியின்றி எடுத்த நாளின்றில்

புறக்கணிப்புகளிலிருந்து வெளியேர
நிகழ்காலம் அறியாதிருக்க,
உன்னுடனான வாழ்வு வேண்டி மண்டியிடுகிறேன்!


தொட்டில் விழிமூடலின்
இரண்டாம் ரசிகை

சம்மணமிட்ட காலில்
சுமக்கும் கருவறை

அன்பின்
முத்தமொழி

திண்ணையின் நுனியில்
நிற்கும் காவல் தெய்வம்

தூக்கி சுமக்கும்
இடை தாங்கி

தத்தி தத்தி நடப்பவனுக்கு
நடைபயிற்சி

பசியறிந்து
உணவூட்டுபவள்

சேமிப்பின்
அர்த்தம் விளக்குபவள்

தவறுகளின்
மன்னிப்பு

தேவைகளின்
தூதுவர்

காதலின்
முதல் பகிர்வு

இச்சையின் அபத்தம்
உணர்த்துபவள்

சட்டை பையின்
ரூபாய் நுழைப்பு!

தாயின்
இரண்டாம் மூச்சு

தன் சிறகு அறியாத
இரு கூட்டுப்பறவை!

மழை...

Monday, October 29, 2012 | 0 comments »


நீ
காக்காகடி கடிக்கவும்
ஒரு மழை
தேவைப்பட்டிருக்கிறது....
ஒரு சாக்லேட் இரண்டு துண்டுகளாய்

நீயோ மழை நிற்காதாவென
புலம்பினாய்
மழை நின்றுவிடக்கூடாதென
வேண்டினேன்
நல்லவேளை மழை நின்றும்
என் கைவிடவில்லை நீ!

சுடிதார் நனைவதாய்
தோள்பற்றி பின்சென்றாய்
உன் தேகச்சூட்டினை
பொழிந்தது மழை!

நனைந்துவிடாமலிருக்க
என்னிடம் விட்டுசென்ற
நோட்டினை
இரவுமுழுவதும் புரட்டிவிட்டேன்
பக்கமெல்லாம் நீ!

நனைந்திடவும்
மழை கண்டு ஒதுங்கிடவும்
துணைக்கு நீ வேண்டும்
நாய் தன் குட்டிகளை காப்பதுபோல!

நேரம் கடந்துவிட்டதாய்
நகம் கடித்துக்கொண்டிருக்கிறாய்
பிறை நிலாக்களே
மழையானதாய் எண்ணமெனக்கு!

இனி எப்போதும் நனைவதிற்கில்லை
உன் துப்பட்டா துவட்டலில்லா
மழைத்துளிகள் பாரமெனக்கு!

கடைசியாய் விட்டுச்சென்ற
முத்த சத்தத்தை தேடியலைகிறேன்
மழையின் ஓசையில்

நனையலாமா என்று கேட்ட
உன் அனுமதியில்
பெய்யத்துவங்கியது காதல்!


இருளை மட்டுமே யாசிக்கும்
என் விழிகளை
என்ன செய்வதாய் உத்தேசம்...

கேட்கும்திறன் தொலைக்க விரும்பும்
என் காதுகளை
என்ன செய்வதாய் இருக்கிறாய்...

ஓ நினைவுகளே!

காலை
மாலை
இரவு
என்ற கூட்டிற்குள்ளிருந்து

நக இடுக்கில் ஊசி நுழைத்து
தசையறுத்து
மெது மெதுவாய் வலி பழக்கி

தேன் கூட்டினில் நூல் நுழைத்து
தேன் எடுப்பது போல
எனையறியாது எனையிழக்கசெய்தாய்

வரமும் சாபமுமாயிருந்த
பசி மறக்க செய்தாய்
தூக்கம் மறக்க செய்தாய்

திரளும் மேக உருவம்
மழையின் கருணை
அணைப்பின் வெதுவெதுப்பு

யாவற்றையும் தின்றுகுவித்து
கண்களின் வழியே
எல்லா பொழுதிலும் ஜீரணிக்க செய்தாய்

வாழ்தலுக்கான நிர்பந்தமின்றி
சுமந்துத்திரியும் உயிருக்கான உடலோ
உடலுக்கான உயிரோ

என் பிடிமானத்திலில்லா
என்னை, உன்னிடம்
மண்டியிட தயாராகயிருக்கிறேன்

கொன்றுவிடு
அல்லது
தற்கொலைக்கு பயிற்சிகொடு!

மழை

Monday, October 29, 2012 | 0 comments »

தரைவிரிப்பில் கால் தேய்த்து
முணுமுணுத்தாள்
மழை

சேலை நனைத்த

மழையுதறி,
விடும் நீள்மூச்சு
மழை!

சாளரம் ஒதுக்கி
சன்னலில் இடம்பிடித்தாள்
மழை

பருகாத கோப்பையின்
ஆவியின் வெதுவெதுப்பு
ரசித்தாள் மழை

முடிந்துவைத்த கூந்தலை
தோள்பரப்பி விட்டிருக்கிறாள்
மழை

உலர் உதட்டினை
இதழால் ஒத்தடமிடுகிறாள்
மழை

கொடி நனையும்
துணியெடுக்க சிட்டாகிறாள்
மழை

சன்னல் கம்பியின்
அடிவருடுகிறாள்
மழை

யாருக்கோ
முத்தமிடுகிறாள்
மழை

கரடி பொம்மையின்
கூந்தல் வருடுகிறாள்
மழை

படிக்காமலே
புத்தகத்தின் பக்கம் புரட்டுகிறாள்
மழை

சட்டென
அழத்துவங்குகிறாள்
மழை

கண்ணாடி பார்த்து
சிரித்துக்கொள்கிறாள்
மழை

அடுப்படியில்
கொரிக்கத்தேடுகிறாள்
மழை!

மெளனம் திரட்டி
மனதிற்குள் இசைக்கிறாள்
மழை

கழுத்து சங்கலியை
கடிக்கக் கொடுக்கிறாள்
மழை

கால்மடக்கி
மூட்டுகூட்டி
நாடி பதிக்கிறாள்
மழை

கொலுசின் திருகாணி
கழற்றிவிளையாடுகிறாள்
மழை

அலைபேசி பதிவு எண்களின்
தேடல் தீவிரப்படுத்துகிறாள்
மழை

நனைவதற்கான ஒத்திகையில்
தனையறியாது அழுதுவிடுகிறாள்
மழை

நினைவுகளின் துயரறுத்து
கண்விழிக்கிறாள்
மழை

தெருவிளக்களின் மஞ்சளில்
ஆறுதலடைகிறாள்
மழை

ஒவ்வொரு துளியாய்
உள்ளங்கையில் உடைத்துவிடுகிறாள்
உள்ளுக்குள் உடைந்துவிடுகிறாள்
மழை

ஏமாற்றத்தின்
பிழை அலசுகிறாள்
மழை

மொழியின்
வார்த்தை தொலைக்கிறாள்
மழை

விட்டத்தின்
சிறை உணருகிறாள்
மழை

தெருநாய் ஒன்றின்
அடைக்கலம் கண்டு
விசும்புகிறாள்
மழை

தனித்து நிற்கும்
மதில் பறவையில்
தன் சாயல் காண்கிறாள்
மழை

மழை நனையும் குழந்தையை
தாய் அதட்டும் குரல் கேட்டு
வெடித்து அழுகிறாள்
மழை

அப்பாவின் சட்டையில்
அக்குள் வாசனை தேடுகிறாள்
மழை

நீ...

Monday, October 29, 2012 | 0 comments »

எழுதப்படாத
கவிதை
நீ

முடிவில் தொடரும்

காற்புள்ளி
நீ

சொல்ல மறுக்கும்
காதல்
நீ

வாக்கியத்திற்குள் அடங்கா
அகராதி
நீ

சொற்கள் தேடும்
கற்பனை
நீ

விளக்கிடமுடியா
பொருள்
நீ

மழையாடும் மழலையின்
புன்னகை
நீ

கவிஞன் எழுத மறுக்கும்
கவிதை
நீ

கேள்வி கேட்கத்தூண்டும்
விளக்கவுரை
நீ

முகவரி மறக்க செய்யும்
தேடல்
நீ

மடல்கள் தீர்ந்தும்
முடியா சொற்றொடர்
நீ

யுத்தமிட தூண்டும்
போர்களம்
நீ

மெளனம் கலைக்கும்
வெண்புரவி
நீ

படிக்கட்டுகளின்
காத்திருப்பு
நீ

கைக்குள் அடங்கிடாத
அழகிய திமிர்
நீ

சாபம்

Monday, October 29, 2012 | 0 comments »

ஏதுமற்றதாய்
உணரும் தருணங்களில்
தீர்ந்துபோன பவுடர் டப்பாவிற்குள்

கரைந்துபோன கண்மை

பென்சிலை நுழைத்து
அறையெங்கும் ஒலிக்கச்செய்கிறாள்

சாதகமாய் காட்டி நிற்கும் கன்னம்
உதட்டோடு உதடு முத்தம் என
எதுவும் வாய்க்காத இரவுகளில்

தன் குட்டிகளை தொலைத்த
பூனையாய்
அறைக்குள் உலவுகிறாள்

தலையணையின் நுனி அதனை
விட்டு விட்டு கடித்து இழுத்து
ஏதுமற்றதன் எண்ணம் சுவைக்கிறாள்

அழுகைக்கான காரணமின்றி
எப்படி அழுகிறேனென
கண்ணாடில் பிம்பம் உடைக்கிறாள்

குளத்து மீனை கவ்விச்செல்லும்
பறவை போல
எதிர்பாராத விபத்தொன்றிற்கு காத்திருக்கிறாள்

அது மரணமாகயிருக்கலாம்
சுயநினைவினை தொலைக்கலாம்
எதிர் வீட்டுக்குழந்தையின் முத்தமாகயிருக்கலாம்

அல்லது

நேற்றைய கனவில்
ஒரு வாய் சோறுட்டிப்போனதாய் சொன்ன
பிறக்காத பிள்ளையின் பெயர்சூட்டுவிழாவாகயிருக்கலாம்!


பிறகு எப்பொழுதாவது
மழைக்கான அறிகுறி தெரியும்போதே
தகவல் சொல்லிவிடு

உன்னை வந்தடைவதற்குள்
மேகம் கலைந்து
மழை பொய்த்துவிட நேரிடலாம்

ஒரு கோப்பை தேநீர் கொடு
மெல்லிசை ஒன்றை இசைக்கவிடு
சற்று நேரம் காத்திருக்க வை

காத்திருக்க வைத்ததற்காக வருத்தம் கொள்
பரவாயில்லையென்றதும் புன்னகை செய்
அப்புறமென்று உரையாடல் துவங்கு

ஈரக்கூந்தலை எதிரில் நின்று
நீர் உலர்த்து
சாரலில் நனைந்து கொள்கிறேன்


என் ரேகைகளுக்குள்
ஒளித்து வைத்திருந்தேன்
கனவுகளையும் கற்பனைகளையும்

நிமிடத்தில் நிகழும் விழிப்பேச்சு
நடுநிசிவரை நீளும் உரையாடல்
இருவர் அறியாமலும் உறங்கிப்போதல்

எது எது என்னவென நீண்ட பட்டியலில்
நீ சிறு புள்ளியாகவுமில்லை
புள்ளியில் பிம்பமாகவுமில்லை

வடிவமற்ற என் உணர்வுகளை
அர்த்தமற்ற பல இரவுகளில்
பொருத்தியிருக்கிறேன் நீ இல்லாததால்

உன் வருகைக்குப்பின்னதான
என் கனவுடைத்தலில்
நீ மும்மரமாயிருந்தாய் முனைப்போடிருந்தாய்

உனக்கும் எனக்குமான உறவின் பெயரினை
மாங்கல்யமாய் குங்குமமாய்
ஊராருக்கு காட்டிக்கொண்டாயே அன்றி எனக்கோ

நீ வந்ததில் சந்தோசமுமில்லை
நீ சென்றதில் வருத்தமுமில்லை

அந்தாதி

உரையாடல்

திருட்டு

மொழியில்லா
உரையாடல்

அவசரகால
சிகிச்சை

தற்காப்பு கலை

சண்டைக்குபின்
உடன்படிக்கை

குற்றத்திற்கான
ஒப்புதல் வாக்குமூலம்

புரிந்துணர்வின்
அடுத்தகட்டம்

உடலியல்
ஆராய்ச்சி

இருவருக்குமான
சமபங்கு

கலவிக்கான
வழிகாட்டி

காதல் எனும்
விளக்கு

காமத்தின்
தீபம்

கூடலில்
முதல் பந்தி

விழிப்பூட்டு
இதழ் சாவி

முற்றுப்புள்ளியில்
தொடங்கும் காற்புள்ளி

காரணங்கள்

Monday, October 29, 2012 | 0 comments »


என்னை ஞாபகமிருக்கா
என கேட்பதில் நியாயமில்லை
ஒருமுறை மட்டுமே பார்த்திருந்தாள்

அனிச்சையாய் அவள் பார்வை
விழுந்ததாகவேயிருக்கட்டும்
அது எனக்கானதென ஒரு எண்ணம்

எதிர் எதிரிலோ அருகிலோ
இல்லாமல் நிகழ்ந்த பார்வையது
இருப்பினும் கண்களில் விழுந்தது

பார்வையானது எதிர்பார்ப்பையோ
பதற்றத்தையோ கொண்டதாக இல்லை
அது ஒரு குழந்தைக்கு ஒப்பானது

யாரோ அழைத்தது போலவோ
அல்லது-எவரின்
செய்கையோ திரும்ப தூண்டியிருக்கலாம்

இன்றும் அப்படியே நிகழ்ந்திருக்கலாம்
அல்லது மேற் சொன்னகாரணங்கள்
ஏதேனும் பொருந்திப்போகலாம்!

ஒத்திகை-2

Monday, October 29, 2012 | 0 comments »

அன்றைய இரவு ஆட்டத்திற்கான
ஊரினை வந்தடைந்து கடவுளை வணங்கியதும்
ஒருமுறை மேடையை சரிபார்த்தல்


ஊர் தலைவன் விழா நடத்துபவன்
தன் குழுவை அழைத்து வந்தவன்
கோயிலின் சிறப்பு அறிந்துகொள்ளுதல்

கருஞ்சிவப்பில் உதட்டுச்சாயம்
எந்த நிலையிலும் அவிழாத வட்டக்கொண்டை
தற்காலிகமாய் மூடிக்கொள்ள ஒரு சால்வை

மஞ்சள் விளக்கின் சூட்டில்
கலைந்து போகாத முகச்சாயமும் பவுடருமும்
அவர் அவர் தலைக்கு தோதுவான கரகம்

தொப்புளுக்கு கீழே குட்டைப்பாவாடை
மார்பு தூக்கி நிறுத்தும் ரவிக்கை
இரத்தம் கட்டுமளவிற்கு சலங்கைகட்டு

சாராயமும் பணமும் தருவதாய்
இருபெண்களில் ஒருத்தியை ஊரிலொருவன்
இரவிற்கு விலை பேசுபவனை வழியனுப்புதல்

மனைவியாவோ அல்லது தங்கச்சியோ
தன்னோடு ஆடுபவளின்
உறவுமுறையை அவ்விரவிற்கு மரணிக்க செய்தல்

இறுதியாக
கரகாட்டத்திற்கான மேடையேறும் முன்
பூமி சுடும் பெண்களின் கடைசி சொட்டு மூத்திரம்!

மெளனம்

Monday, October 29, 2012 | 0 comments »


தொலைந்து போன
பகல் பொழுதின் நிகழ்வுகளை
துளை மிகுதியான சல்லடையொன்றில்

பருவப்பெண்ணின்
வருடல் போல கனா கண்டபடி
பின்னோக்கிப்போனால்

கனவில் மிதத்தல்
கூட்டத்தில் சத்தமாய் சிரித்தல்
சிந்திப்பது போல் பாவனை செய்தல்

பாடல் ஒன்றினை முணுமுணுத்தல்
அழைப்பிற்கு காத்திருத்தல்
நெருங்கியவரிடம் முகம் சுளித்தல்
சட்டென முகம் வாடிப்போதல்

ஒரு இயந்திரத்திற்கு
ஒப்பீடாய்போன மனதினை
கொன்றொழித்தலோ தீர்வு தேடியலைதலோ

மெளனத்தில்
குழம்பித்தொலைப்பதைவிட
என்ன செய்வதென்று ஏதும் செய்யாமலிருப்பதைவிட

அறியா பிணம் ஒன்றிற்கு
ஈ ஓட்டி நேரத்தை கடத்தலாம்!


முடிந்ததைப்பற்றி
பேசி எதற்கு என்கிறாள்
புருவமிரண்டையும் குறுக்கியபடி

முணுமுணுப்பு அடங்காதவளாய்
கடிந்து கொண்டாள்
கையுதறி நடக்கத்துவங்கினாள்

முத்தமென்பது ஒருவரால்
நிகழ்த்தப்படுவதில்லையென்றேன்
"இதுக்கு மட்டும் குறைச்சலில்லை என்கிறாள்"

உதிர்ந்த சோளத்தின்
தட்டை நிறத்திலிருந்தது
கருவிழி மிஞ்சிய பகுதிகள்

எதார்த்தமாகவே

எந்த நேரத்திலும் உடைவதுபோல
தேங்கியே இருந்தது விழிகளில் நீர்

அந்த கண்களுக்கு பேசவோ
சிரிக்கவோ உணர்வுகளை உதிர்க்கவோ
தெரியாதது போலவேயிருந்தது

உணவுக்கு அமரும்
கோயில் மரத்தடியின் குடிநீர்குழாய்
பார்த்தபடி வெறித்திருந்தது கண்கள்

சொட்டு சொட்டாய் நிறையும்
தண்ணீர் பாட்டிலுக்கும்
உணவருந்தும் காலத்திற்கான இடைவெளியில்

அமைதியுற்றிருந்தது அவரின்
ஜவ்வுமிட்டாய் விற்பனைக்கான
சமிக்ஞையொலி!

துரோகம்

Monday, October 29, 2012 | 0 comments »


உன் நினைவினை பட்டாம்பூச்சியென
குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்
என் மனமெனும் பேரேட்டில்

சன்னலயே சார்ந்திருக்கும்
பட்டாம்பூச்சிக்கு சாளரங்களின்
உரசல்கள் ஏனோ பிடிப்பதேயில்லை

சாலையை நோக்கி விழித்தேயிருக்கும்
கண்களில் விழும் பிம்பங்கள்
புழுவென நகர்ந்துகொண்டேயிருக்கின்றன

எச்சில் விழுங்குவதையோ உமிழ்வதையோ
எக்கனமும் விரும்புவதேயில்லை
சிலைபோல பாவித்துக்கொள்கிறது

வெயில் பொழியும் பொழுதில்
துணையிருக்கும் கரடிபொம்மையின்
ப்ருத்தி மயிரை வருடிக்கொண்டேயிருக்கிறது

அறை,உடை, கண்ணாடி,
மாதவிலக்கு துணியென அப்பட்டாம்பூச்சி
சதா இம்சித்துக்கொண்டேயிருக்கின்றது

துரோகம் ததும்பும் வேளையில்
கொன்றுவிடலாமென்றால்
உடலென்பது உடல் மட்டுமில்லையே!

ஒத்திகை

Monday, October 29, 2012 | 0 comments »


விந்துக்களின்
பிசுபிசுப்பினை விரும்பாதவள்
யோனியடர்ந்த மயிரினை நீக்கியிருந்தாள்

இதழ் சுவைப்பதையோ வாய்ப்புணர்ச்சியோ
விரும்பாதள் உதட்டுச்சாயத்தில்
தன் வெறுப்பை ஒழித்துவைத்தாள்

உடலையிறுக்கும் ஆடையினை
பலமுறையுடுத்தி தசைகள் பிதுங்குவதை
ஏற்றுக்கொள்ள ஆயத்தமானாள்

ஒரு கோப்பை மதுவருந்தி
சுயம் தொலைத்து
கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டாள்

ஆளுக்கேற்ற விலை நிர்ணயத்தின்
லாவகம் கற்றதை
மீண்டுமொருமுறை நினைத்துக்கொண்டாள்

பிரம்புகளின் வீச்சில் களிம்பு பூசி
அழுததன் அடையாளம் அறியாதிருக்க
முகம் கழுவி வர்ணம் பூசிக்கொண்டாள்

கடைசியாய் நீளப்படத்தின்
காட்சிகளை விழிகளில் வழியவிட்டு
குடும்பத்தை, தோழிகளை கண்களில் நிறுத்திக்கொண்டாள்

சீறுடை மறந்த சிறுமியவள்
வீதியிறங்கி
தொழிலுக்கு ஆயத்தமானாள்!


சோழியுறுட்ட துவங்கியிருக்கிறாள்
விழிகளாலும் விரல்களாலும்
என் வீட்டுத் திண்ணையில்

கட்டம் கட்டமாக நகரும்
வலையோசையும் சிணுங்கல்களும்
அவளின் உடைந்த வளையல்களும்

என் கோட்டையை கடக்க நேருகையில்
திருவிழாக்கால கோபுரமாகிறது
வளையல்களின் குவியல்கள்

வெட்டுப்பட்டு வெளியேறுகையில்
பற்களுக்கு கடிக்க கொடுக்கும்
கீழுதட்டில் தொக்கி நிற்கும் மீண்டுமொரு தாயம்

விளையாடுவதில் சோர்ந்தவளாய்
பக்கவாட்டில் கால்நீட்டி மடக்கையில்
வந்து போகும் கொலுசும் நெட்டிமுறிப்பும்

அள்ளி முடியும் கூந்தலும்
சட்டென தொடையில் கிள்ளிவைத்தலும்
ஆட்டம் கலைவதற்கான சமிக்ஞைகள்

பாதியில் கலைந்து போறவளை
பந்தயம் என்னவாயிற்று என்றால்
அப்படி அந்த முத்தத்தில் என்னயிருக்கிறது என்கிறாள்!

கோடை நிலவு

Monday, October 29, 2012 | 0 comments »

நீ தனித்துவிடப்பட்டிருப்பதாய்
என் தீவு மூங்கில்கள்
கூட்டமாய் வந்து சொல்லிக்கொண்டிருக்கின்றன

ஆடை சூழாதிருக்கும் அங்கத்தினை

குறிப்பெடுத்து சொல்லிப்பார்க்கின்றன
தொழில் பழகும் தையல்காரன் போல

கிளையொடித்து சாறுபிழிந்து
என் இரு கைகளிலும்
குறிப்பெழுதி செல்கின்றன

பறவைகள்கூட உன்னைப்பற்றித்தான்
பாடுகின்றனவென்றும் அதன்மொழி
தங்களுக்கு புரிவதாகவும் இம்சிக்கின்றன

அந்த கடலைப்பார்
உன் மேலுள்ள மோகத்தில்
அங்குமிங்குமாய் அலைகிறது என்கின்றன

மனிதர்களின் மொழியறியா இயற்கைக்கு
எப்படி புரியவைப்பேன்
குளிப்பது கோடை நிலவென!


ஓங்கிய காற்றில்
பசையறுத்து விடுபடும்
இளம் தளிரின் வலி

தூண்டிலில்
சிக்கிக்கொள்ளும்
மீன் தொண்டையின் தவிப்பு

கைவிடப்பட்டு
வேலி தாண்டிய
படர்ந்த வேரின் துயரம்

பலியிடப்படும்
சேவல் தலையறுப்பின்
துடிதுடிப்பு

பாலில்லா மார்பில்
நாக்கு உலரும்
குழந்தையின் பரிதவிப்பு

தெருக்குழாயில்
நீர் உறிஞ்சும்
சிறுவனின் ஏமாற்றம்

குஞ்சோடு
கூட்டைத்தொலைத்த
பறவையின் தேடல்

ஊசிக்காற்றில்
மூடிவிட கைகள் தேடும்
முதியவரின் ஏக்கம்

வற்றிய சேற்றில்
மறிக்கும் தாமரையின்
போக்கின்மை

கருக்கலைந்த
தாயின் மனதளவு
மரண ஒத்திகை!


பிரிவுக்குப்பின் நிகழ்ந்த
நேற்றைய இரவின் கோடுகிழிப்பில்
குருதியெங்கும் உன் வாசனை

அன்றொரு நாள் உனையறியாதெடுத்த
வியர்வை வாசம் நிறைந்த
கைக்குட்டையின் பின்புலத்தினை

விழி நீர் துடைக்கையில்
மார்பினில் விழுந்த
ஒரு சொட்டு இரத்தம் இம்சிக்கிறது

ஒரு முத்தத்திற்காக
நெருங்கித்தோற்ற பேருந்துபயணமன்று
பயணச்சீட்டின் பின் குறிப்பில்

நீ ஒட்டி வைத்த சுயீங்கம்
என் உளறல்களை
தற்காலிகமாய் நிறுத்திக்கொண்டது

இரவுகளில் தொலையத்துவங்கும்
என் மீதான என் பற்று
உன் நினைவுகளில் ஆறுதலடைகிறது

எங்கேனும் உனை காண நேர்ந்தால்
அயல் தேசத்து பறவைப்போல
அருகிலமர வரம் வேண்டுமெனக்கு!


கற்பனையின்
பிம்பமொன்றை
காதலிக்கத்தொடங்கியிருக்கிறேன்

எனக்கான வடிவில்
எனக்கான சுயத்தில்
எனக்கான பொழுதுகளில்

விரோதம் விருப்பம்
இன்பம் துன்பம்
காதல் காமம் என

ஒரு கோப்பை தேநீரோடு
கட்டிலில் தலையணையோடு
குளியலரையில் சோப்போடு

எவனோ ஒருவன்
ஆக்கிரமிக்கத்துவங்கியிருக்கிறான்

வெயிலுக்கான குடைபிடித்தலில்
மழைச்சாரலில்
அடுப்படியில்

அவன் என்னை
திண்ணத்துவங்குகிறான்

முத்தமிடுகிறான்
தவிக்க வைக்கிறான்
புணருகிறான்

தொடு உணர்வு இல்லாமலே
தொந்தரவு செய்கிறான்

அவன் வாசனை தேடுகிறேன்
அவன் மடிக்கு ஏங்குகிறேன்
தரையில் புரள்கிறேன்

இருக்குமிடத்திலிருந்து
கானகம் அலசுகிறேன்
மின்னலின் கீற்றாய் உள் நுழைந்தவனைத்தேடி


அவனை கொலை செய்ய
நெருங்கும் வேளையில்
வெளிப்படும் குரலோசையை

அழுகையில் கெஞ்சும் பொழுது
பயத்தில் அலறும் பொழுது என
முன்னமே யூகித்து வைத்திருந்தேன்

தாக்க துணிந்து கத்துவதையும்
உதவி கேட்டபடி ஓடும் பொழுதும்
எப்படி சிரிக்க வேண்டுமென

நிசப்தம் நிறைந்த பொழுதில்
கண்ணாடி முன்னின்று
சிரித்து சிரித்து ரசித்துக்கொண்டேன்

தூக்கம் தொலைந்த
இரக்கமற்ற சாமத்தில்
உயிரற்ற உடலை காண்கிறேன்

அகால மரணமென்ற செய்தியில்
அவன் புகைப்படம் பதித்து
தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன்

அவனைக்கொன்றதற்காக
அழுது கொண்டிருக்கிறேன் தூரத்திலொரு
பாதிரியாரின் வாசகம் கேட்டது

கர்த்தரே எங்கள் பாவங்களை மன்னியும்!

என்னை சாகச்சொல்லி
எவனோ ஒருவன் உள்ளிருந்து
தூண்டிக்கொண்டேயிருக்கிறான்

உயிரின் வடிவமானது

இரத்த நிறத்தில் வேண்டுமா
துடிதுடிப்பில் வேண்டுமா என்றால்

நீ சாகவேண்டும்
அவ்வளவே என்கிறான்
நான் மட்டும் கேட்கும் குரலில்

துயர் மிகுந்த பாடலையோ
வரியில்லா இசையோ
அமைதியோ விரும்பவில்லை அவன்

ஒரு குறிப்பெழுதவும்
அனுமதிக்க மறுக்கிறான்
குரல்வளையில் அமர்ந்திருக்கிறான்

எங்கே உடைந்துஅழுது
நான் மீண்டுவிடுவேனோ
என்ற பெரும் அச்சம் அவனுக்கு

இருளை வெறுக்கிறான்
வெளிச்சம் தவிர்க்கிறான்
மின்விளக்கின் சூட்டில் தவிக்கும்

நிறமிழந்த பட்டாம் பூச்சி ஒன்றின்
துடிப்பை அதன் இறக்கை அசைப்பை
சாகும் விதத்தை ரசிக்கிறான்

அறையின் சூட்டில் நனையும்
உடலை நள்ளிரவில் நீர் நனைத்து
கொன்றுவிட துடிக்கிறான்

யாரும் பேச்சு கொடுத்துவிடாதிருக்க
எப்போதும் இனம் புரியா
துயரத்திலமர்த்தி ரசிக்கிறான்

புத்தக திறப்போ கண் மூடலோ
நிகழ்ந்திடாதிருக்க
இரவெல்லாம் கவனமுடன் இருக்கிறான்

இயற்கையை ரசித்துவிடுவேனோவென்று
பெரிதும் அச்சம் கொண்டு
என் கால்களை கட்டிப்போடுகிறான்

கனவுகளின் எண்ணிக்கை கூட்டுகிறான்
அது நிகழ்ந்திடாதிருக்க துன்பமுற
சிந்தனை சித்தரவதை செய்கிறான்

அடிக்கடி பெருவிரல் கட்டு நடனமென
கண்முன்னே நிறுத்துகிறான்
ஒப்பாரி கேட்க செய்கிறான்

பாதையில்லா பயணத்தை
காட்சிகளாக்குகிறான்-நான்
எங்கோ நடப்பது போல காட்டிக்கொல்கிறான்

என் பலவீனம் தேடுகிறான்
விலங்குகள் மீது மட்டும்
இரக்கமுள்ளவனாய் இருக்க செய்கிறான்

கண்ணாடி பிம்பம் உடைத்து
முகத்தை ரசித்திடாதிருக்க
எல்லா காலையும் துயர் ஏற்றுகிறான்

புழுக்கள் நெழியும் உடல்
சிதைந்த மாலை நாறும் ஊதுபத்தி
யாவும் மழையில் வேண்டுமென அலைகிறான்

எதற்கும் இணங்க மறுக்கிறான்
மதுவோ மாதுவோ ஒரு கோப்பையில்
தாகம் தீர்ப்பவன் போலில்லை

அவனுக்கு நான் சாக வேண்டும்
செல்லரித்து செல்லரித்து
தினம் தினம் சாக வேண்டும்


நிலவின் நிறமொத்த-அவள்
பாதம் விளையாடும்
ஞாயிறு பொழுதுகளில்

அறைகளின் பளிங்குகளில்

ஊஞ்சலாடும் கைகளால்
சிதறும வளையலோசைகள்

கால் குவித்து நகர்ந்து நகர்ந்து

ஆடை மேலேறும் கால்கள்
நெற்றியெங்கும் முத்துக்கள்

வட்டத்துண்டுகளை வெட்டியது போன்று

பாவாடையில் வளைவுகளாய் நெளியும்
ஒற்றைத் துண்டு வானவில்

நீர் படர்ந்த தரைகளில்

நழுவிய கற்றை கூந்தலோடு
விழுந்திடும் முகம் அனிச்சமலரழகு

பாதம் படாது அறை கடந்து

அழுக்கெடுத்த கொலுசு மாட்டிட
என் முட்டியிலேறும் அவள் கால்கள்

விரல்கள் ஒவ்வொன்றாய்

சொடுக்கெடுத்து முத்தமிட
மீதம் யாவும் அவர்அவர் கற்பனையில்!

நெருஞ்சிக்காட்டில்
உடல் கிழிபடாமல் புணரும்
பாம்புகளிரண்டு கனவில்

மேலெழும்பி ஆடுவதற்கு

தரையூன்றிய வாலில்
காமத்தின் மொத்த தூண்

முத்தப் பரிமாற்றத்தில்
நழுவிய எச்சில் விசத்தில்
நீலமாகின சங்குப்பூக்கள்

பாம்பின் சாயலில்
நீளும் அதன் கொடியில்
பச்சைநிறத்திலொரு பாம்பு

கால்தடமில்லா
குளத்தின் மற்றுமொரு பாதையில்
நெளியும் இடையோடு

செப்புக்குடம் கொண்டு
தாமரைக்கொடி விலக்கிக்கொண்டிருந்தாள்
முந்தானை சுருங்கிய மார்போடு

செம்மன் உறைந்த முற்றத்தில்
தெளித்த நீர் சிதறலில்
நேற்றைய கனவின் கலவி வாசனை!

இறங்கல்

Monday, October 29, 2012 | 0 comments »


கரையானுக்கு பதிலாய்
எறும்புகள் சில
ஊர்ந்து கொண்டிருந்தது உடலில்

வலி உணரும் வேளையில்
காதினை ஆட்டுவதையோ உடலசைவோ
நிகழட்டுமென நடைவேகம் குறைத்தேன்

எவ்வித அசைவுமில்லாததால்
அலுவலகம் நடக்கலானேன்
பூனை இறந்துவிட்டதென்று!

நீ...

Monday, October 29, 2012 | 0 comments »


என் நதியில்
நீ
இலையா நீரா?

என் பிடியில்
நீ
தளர்வா தவிப்பா?

என் சாலையில்
நீ
நிழலா ஒளியா?

என் பயணத்தில்
நீ
திசைகாட்டியா விழித்திருட்டா?

என் படகில்
நீ
துடுப்பா துளையா?

என் கனவில்
நீ
காட்சியா காட்சிப்பிழையா?

என் வாசிப்பில்
நீ
மொழியா இடையூறா?

என் பார்வையில்
நீ
விடியலா விபத்தா?

என் வெயிலில்
நீ
அனலா கானலா?

என் நினைவில்
நீ
பலமா பலவீனமா?

என் வானில்
நீ
நீலமா நீளமா?

என் தொலைதலில்
நீ
தேடலா தேம்பலா?

என் நனைதலில்
நீ
கண்ணீரா மழையா?

நீ

Monday, October 29, 2012 | 0 comments »

என் குடைபிடிப்பில்
நீ
முந்தானையா முத்தச்சாரலா?

என் குருதியில்

நீ
சிவப்பணுவா வெள்ளையணுவா?

என் காமத்தில்
நீ
தாகமா தண்டனையா?

என் வீணையில்
நீ
நாளமா நாணமா?

என் படுக்கையில்
நீ
அடக்கமா அத்துமீறலா?

என் அணைப்பில்
நீ
கரடி பொம்மையா கற்பனை குதிரையா?

என் அடம்பிடிப்பில்
நீ
கெஞ்சலா கொஞ்சலா?

என் விரல்நுனியில்
நீ
கொய்யாமொட்டா கீறிய சுளையா?

என் உடலில்
நீ
கீறலா வியர்வையா?

என் முனகலில்
நீ
வார்த்தையா வாக்கியமா?

என் கால்பின்னலில்
நீ
ரோமச்சிக்கலா நகக்கீறலா?

என் இயக்கத்தில்
நீ
தாளமா நீள்மூச்சா?

என் அணைப்பில்
நீ
உள்வாங்கலா உணவூட்டலா?

என் தசையிறுக்கத்தில்
நீ
நளினமா நெருக்கமா?

என் வளையலுடைத்தலில்
நீ
உள்வாங்கலா உடலுதறலா?

என் தலையணையில்
நீ
பல்கடிப்பா நகநுழைப்பா?


உப்பு மூட்டை தூக்கவேண்டுமென்று
அடம் பிடித்தாள்
மதியம்கழிந்த பொழுதொன்றில்

தூக்கத்திற்கு அலையும் விழிகளில்
தன் முகத்தினை
பதியம் வைத்து காத்திருந்தாள்

எந்தப்பக்கம் புரண்டு படுத்தாலும்
கெஞ்சத்துவங்கினாள்
மழலை எடுப்புக்கு ஏங்குவது போல

வில்லாய் மடிந்து கழுத்தைக் கட்டியவளை
பின்பக்கம் வாடி என்றால்
கொஞ்சநேரமென கெஞ்சினாள்

அடிபோடி என்று நழுவினால்
காலிலேறி நடவென்று
கண்களால் நடனமாடினாள்

மெத்தையாவது அவளோ நானோ
முத்தத்தில் முந்திக்கொண்டது
முரண்டுபிடித்த உதடு!

உன்
தவிப்புகளின் ஆழம்
இரவினை அசைத்துப்பார்க்கிறது

உன்

தேடல்களின் உளறல்கள்
யாரென யூகிக்க அனுமதிக்கிறது

உன்
குரல்களின் தடுமாற்றம்
இரத்த வேகம் கூட்டுகிறது

உன்
மூச்சுக்காற்றின் வேகம்
சலனமடைய செய்கிறது

உன்
நூற்றாண்டு காதலை
எங்கேனும் குறிப்பெடுத்து வை

என்றாவது ஒருநாள்
உன் கவிதைகாட்டி
மெய்சிலிர்க்கட்டும் என் பிள்ளை!

எல்லா சாலைகளும்
உன் கூந்தல் வளைவுகளை
நினைவூட்டுகின்றன!

சாலை இணைப்புகள்

காணுகையில் எனையறியாது
உன் கைக்கோர்ப்புக்கு
அலைகிறது மனது!

சிக்னல் விளக்குகள்
நீயில்லா இரவை
நிறம் மாறி நிறம் மாறி
பரிகாசிக்கின்றன!

இறக்கமான
ஒரு சாலையில் நடக்கிறேன்
உன் காலடி ஓசை தேடுகிறது
என் காதுகள்!

சாலையோர மைல்கற்கள்
நீ என் கை பிடித்து அமர்ந்ததை
காட்சிப்படுத்துகின்றன!

உன் புன்னகையின் சாயலில்
வானமெங்கும் நட்சத்திரங்கள்
சாலையெங்கும் மின்விளக்குகள்!

நிலவை தொலைத்த
வானம் போல
சாலையில் நானும்!

மிருகம்

Monday, October 29, 2012 | 0 comments »


உன் நினைவுகளின் பயணத்தோடு
கூடடைந்த மொழியறியா தேசத்தில்
சன்னல்வழி காட்சிகள் ரசிக்க இயலவில்லை

சாளரங்களின் முகஉரசல்கள்
உன் உலர்ந்த கூந்தலை
முன்னிருத்தி இம்சித்தன

மங்கலான விளக்கு வெளிச்சத்தில்
உன் நெற்றிவியர்வைக்கு அலைந்தது
எல்லை மீறிய கண்கள்

பெண்ணொருத்தி ஆடவனின்
வருகைக்காக காத்திருப்பது போன்ற
ஓவியத்தினை சுவற்றில் கண்டதும்

உன்னிடமிருந்து விடைபெறுகையிலிருந்த
உன் முகபாவனையை அதில் பதித்து,
ஆறுதலடைந்தது என் மிருகம்!

ஆமென்

Monday, October 29, 2012 | 0 comments »


அடர் சோகத்தில் தொடர் ராகமாய்
முந்தைய இரவின் தேடலையும்
இன்றைய இதயக் குமுறல்களையும்

மெளனத்தின் துணையோடு
கீதம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
யாருக்கும் பேச்சுக் கொடுக்காமல்

முன்பொருமுறை சூட்டிய
இதயமற்றவன் பட்டத்தினை
கட்டிக்காக்கிறது கண்கள்

பார்வையில்லா பறவையொன்று
இறக்கைக்கு ஓய்வு வேண்டுவது போல
எனக்கொரு இளைப்பாருதல் வேண்டும்

ஆண்டவரே எனக்கொரு தனிமையும்
அழுவதற்கும் சொல்லித்தாருங்கள்
ஆமென்!

முத்தமொன்று பாக்கியிருப்பதாய்
வெளிச்சம் மங்கிய பொழுதில்
வரச்சொல்லியிருந்தாள் காதலி

சட்டை பேண்ட் நிறமும்

அவளுக்கு பிடித்தமான
சாக்லெட் வாங்கிவரச்சொன்னாள்

சற்றுமுன் தொடுத்த மல்லிகைப்பூவினை
தாமரை இலையிலிட்டு
நீர் தெளித்தது போலிருந்தாள் ஈரக்கூந்தலில்

முத்தமென்றதும் உடனே வந்துவிட்டதாய்
கேலி செய்தவள் சாக்லேட்டினை
மிளகாய் கடிகடித்து ஒரு வாய் கடிக்கக்கொடுத்தாள்

பால்கனிக்கும் எனக்குமான இடைவெளியில்
தவழும் முத்தமொன்றினையும்
அவள் குவியலையும் காட்சியோட்டுகையில்

அருகிலிருந்து விடைபெற்றிருந்தவள்
இப்படியாய்
அலைபேசியில் கடிந்து கொண்டாள்

உன் பைக் கண்ணாடியில்
முகம் பார்த்து தலை கோதுகையில்
முத்தமிடத் தெரியாதாவென்று!

தன் காதில் தனக்கு கேட்டிடாத அளவிற்கு
ஒர் உரையாடல் நிகழ்த்த விரும்பிய அவனுக்கு,
கண்களில் கற்பனையேதும் இல்லாதிருந்தது

மதிய வெயிலில் கீறிட்டு விழும்

சன்னல்வழி ஒளியில் விரல் நீட்டி
ஒளி ஒடித்துக்கொண்டிருக்கிறான்

எப்போதும் விரிந்து கிடக்கும்
அவனது காகிதப்படுக்கை
முதுகில் பிசுபிசுத்து அறைக்குள் நடக்கவிட்டது

எந்தப்பாடலுக்கும் செவிகொடுக்க மறுக்க
கணினிச் சீட்டாட்டத்தில்
தோற்றுக்கொண்டேயிருந்தான்

அழுவதற்கான காரணமுமின்றி
வேடிக்கைப்பார்க்க வீதியுமின்றி
அவனுள்ளிருந்து வெளியேறிய அவனை

விருப்பங்களற்ற விருப்பத்தை புகுத்த
புத்தகம் வாசிக்க அமர்த்தினால்
தலைப்பைக்கூட பார்க்க மறுக்கிறான்

துணிகள் தொங்கும் இருபக்க கயிறுகளும்,
தனிமையும் சாதகமாயிருக்க
அவனைக்கொன்றுவிடலாமென்று துணிந்தவன்

பெரிதாய் அஞ்சினான்
ஒரு பட்டப்பெயரை தவிர்க்கவிரும்பினான்-அது
வாழத் தெரியாதவன் தற்கொலை செய்துகொண்டான் என்பது!

பிடிவாதம்

Monday, October 29, 2012 | 0 comments »


ஓங்கிய காற்றில் பொழியும்
மழைத்தூவானம்
அறை நிரப்பிக்கொண்டிருந்த இரவு அது

காற்றில் மோதி சத்தமிடும் கதவை
தாழிட மனமில்லா அளவிற்கு
குறுஞ்செய்தியில் லயித்திருந்தது கைககள்

கனவில் வந்துபோன வெற்றுக்கால்கள்
நினைவில் வர -உனக்கு
கொலுசு பிடிக்குமா என்றொரு கேள்வி

குறுஞ்செய்தியின் நுன்னிய சத்தத்தின் நடுவே
கேட்டுவிடச்சொல்லி தோற்றுக்கொண்டேயிருந்தது
இனிய இரவு என்று சொன்ன பின்பும்...

வெற்றுக் குருஞ்செய்தியோ பெயர் மட்டுமோ
பாதி தூக்கத்தில் அனுப்பிட மாட்டாளாவென
தூங்காமல் காத்திருக்கிறது மனது

இருவருக்குமான கயிறு இழுத்தல் போட்டியில்
காதலெனும் கட்டெறும்பு
உன்னைக்கடித்துவிடாதெவென்றே கடக்கிறது இந்த இரவும்!


முதலிரவு முடிந்த காலையில்
கூந்தலை காற்றில் உலவவிட்டபடி
மாடியிலிருந்தவள் கீழே போகலாமா என்றாள்

இப்படியேவா? என்றவன்
வலதுஓரக்கூந்தலை வருடிக்கொண்டே
பின்னிப்போடு பூ வைக்க அழகாக இருக்குமென்றான்

எனக்கு தெரியாதென்றவளை
சன்னலின் ஓரமாய் தலை திருப்பி
மூன்று கற்றைகளாக்கி பின்னிக்கொண்டிருந்தான்

வளைவாக வெட்டியிருந்த
அவள் ஜாக்கெட்டின் வளைவில் விரல் நுழைது
அவனும் ஒரு வளைவு செய்தான்

போதும் போதும் என நழுவி
கண்ணாடிப்பார்த்து நல்லாயிருக்கு என்றாள்
முத்தமிட நெருங்கி விலகி கீழே சென்றார்கள்

அவள் புகைப்படத்தொடு அவன்
ஜடை பின்னிக்கொண்டிருக்கிறான்
யாரும் தொந்தரவு செய்யாதிர்கள்...

இப்படிக்கு
நிலைக்கண்ணாடி!

...........................

Monday, October 29, 2012 | 0 comments »

உன் இருக்கையினை தீர்மானிப்பதென்பது
நழுவும் துளிகளை
கைகளில் ஏந்த முன்னேறுவது போன்றது

நீ அருகில் இருப்பது போலவும்

அடிக்கடி காதில் எதோ சொல்வது போலவும்
கற்பனை ஒத்திகை நிகழ்ந்தாயிற்று

கண்ணாடித்திரையொட்டிய
இருக்கையினை நான் தீர்மானித்திருக்கிறேன்
நீ வருகையில் உன் முகபாவனை என்னவாயிருக்கும்

என் முகம் கண்டதும் கையசைக்கலாம்
ஒரு புன்னகை செய்யலாம்
வேறெங்காவது அமர்வதற்கு வேண்டலாம்

என் விருப்பத்திற்கு
நீ விட்டுவிடுவாயோ என்ற அச்சமும்
நொடிக்கொருமுறை மேலோங்குகிறது

ஆகையால்
தாமதமாய் வருவதென்றிருக்கிறேன்!

எப்படியும் வாங்கிவிடுவாள்-அவளின்
கருங்கூந்தல் நிறம் பூசிய சிலேட்டில்
ஆங்கிலத்தில் நூற்றுக்கு நூறு

வண்ண வண்ணமாய் ஆடையிருக்கையில்

சீருடையில்-அவளோ
அங்குமிங்கும் நடந்துத்திரியும் பட்டாம்பூச்சி

காற்றினில் கலந்திட்ட குரலானது
காதுகளில் எட்டாத இவ்வேளையில்
இரட்டை ஜடை வரத்தவறுவதில்லை கண்முன்

மாலை ஒலிக்கும் மணியோசையில் ரசிக்கும்
எவளுக்கும் வாய்க்காதொரு உதடு
அதற்கு மேலொரு மச்சம்

அந்தப்பறவை உதிர்த்த இறகு ஒன்று
என் விட்டத்தில்
இப்படி கிறுக்கிக்கொண்டிருக்கிறது

பருவம் எட்டியிருப்பாள்
படிப்பு முடித்திருப்பாள்
மனமாகியிருப்பாள்
தாயாகியிருப்பாள்...

அன்று முகவரி அறியவிரும்பவில்லை
அவள் வீடுதேடி
கால்கள் நடக்கவில்லை

இன்று மனமோ தேடிக்கொண்டிருக்கிறது
அவள் பெயரோடு கூடிய முகம்
முகநூலில் கிட்டிவிடாதாவென்று!

எல்லா இரவுகளிலும் மனமெனும் மதிலில்
மல்லிக்கொடியில் கவலைதொடுத்து
வந்தமரும் ஒரு பூனை

இரவின் நிறத்தினையொத்த

அப்பூனையானது
முந்தைய இரவின் தேடலையும்

இன்றைய விரக்தியின் உச்சத்தையும்
துண்டுதுண்டுகளாக்கி
தனக்கு ஏதுவாக சிதைக்கத்துவங்கியிருக்கும்

பெருமழையில் இலையடர்ந்த
வேப்பமரமொன்றின்
நிலவினில் ஆடும் கரும்பச்சையிலைகள்

அழுதுவிடு
என வேண்டுவது போலிருக்கும்

வெயில் இறங்கிய தார் சாலையின்
பின்னிரவுகளில்
மஞ்சளாய் படரும் விளக்கொளி,

கசிவேதுமின்றி
இதயத்தை கவ்விப்பிடிப்பது போலிருக்கும்

மரணத்தின் தேடல் விரும்பாமல்
உதடுகள் மெளனித்து உள்ளத்தில் சிதைவுரும்
யாவருக்கும் எளிதில் கிடைத்துவிடுகிறது

அவன்(ள்) ஒரு தனிமை விரும்பி!

மழை நனைதல்

Monday, October 29, 2012 | 0 comments »

நீ
வீதியில் நனைந்து வருதைக்கண்டு
பதைபதைக்கும் மனது

நான்கு பக்கமிருந்து கவிழ்ந்த

ஓட்டுநீரின் நடுவே நீ
மழையாடுகையில்

குளிர்கிறது கண்கள்
அரணாகிறது சுவர்கள்
சூடாகிறது தேகம்!

நினைவுகள்

Monday, October 29, 2012 | 0 comments »

கல்லறை ஒன்றெழுப்பி
உன் நினைவுகளை முன்னிருத்தி
பனைமரத்தூன் சாய்ந்து
பருகிட முழுநிலவு இரவு வேண்டும்

நித்தமும் உன் நினைவைத்தவிர
வேறு நினைவற்றிருக்க வேண்டும்
இறந்திடாத உன் வருகைக்காக
காத்திருக்க வேண்டும்

மலரில்லா என் காட்டுக்குள்
மனமாக உன் மனம் வேண்டும்
வழிந்திடும் கண்ணீரில்
தினமும் வாசம் வீசிட வேண்டும்

அழுதிடக்கூடாதென்று
எண்ணுகிற எண்ணத்தில்
அனுதினமும் தோற்றிட வேண்டும்
அது நிகழ்ந்திடுமாயின் இறந்திட வேண்டும்


பாலைவன மணல் திட்டில்
மடிந்து கிடக்கும்
கிழக்கு நோக்கிய நிழலில்

இறையில்லா பாம்பொன்று
ஊர்ந்துகொண்டிருந்தது
வெயில் மறையும் திசை நோக்கி

தணிந்துவிடாத மணல் சூட்டில்
உட்புகமுடியா உடலினை
சபித்துக்கொண்டே பயணித்தது

அதன் துயர் தாங்காது கால் கவ்விய
கழுகின் செயலினை
பாவக்கணக்கில் சேர்த்துக்கொண்டார் கடவுள்!


கொடுந்துயர் ஒன்றினை
புதைப்பதற்கான
குழி வெட்டிக்கொண்டிருந்தேன்

நான் என்பவன் ஆண் என்பதால்
ஒரு பெண்ணுக்குள் புகுத்திடும்
வித்தை கற்றேன்

விழியை ஆயுதமாக்கினேன்
அன்பினை ஆயுதமாக்கினேன்
காத்திருத்தலை ஆயுதமாக்கினேன்

அவளின் பலவீனமொன்றினை
ஒரிரவில்
குடைந்தெடுத்து கூர்மையாக்கினேன்

உறங்க மனமில்லையென
உளறிய வார்த்தை பிடிமானங்களை கொண்டு
குழிக்கான பாதையை கட்டமைத்தேன்

அவளுக்கு தோதுவாய் ஒரு தேநீர் கடையில்
அருகில் அமர்த்தி துயர் ஊற்றினேன்
எவ்வித சலனமுமின்றி பருகத்துவங்கினாள்

பின்னர் இருவருக்கும் பொதுவாய்
அத்துயரத்திற்கு
காதலென்று பெயரிட்டேன்!

மழை நனைதல்

Monday, October 29, 2012 | 0 comments »


அவளுடனான
மழை நனைதல் என்பது

கைகளின் முடிசிலிர்கும் அளவிற்கு
எப்படி உரசுவதென பழகுவது

வேகமாய் வீசும் சாரலில்
தோள்பற்றி அணைப்பது

குடை மாற்றுகையில்
நனைப்பது நனைவது

மிக நெருக்கமாய்
கண்களில் துலாவுவது

தலை தூக்கி பேசுகையில்
உதட்டில் கரைவது

நீர் ததும்பிய சாலையில்
கரம்பற்றி கடப்பது

விடுதி வாசலில்
பகிற முடியாத முத்தத்தை விட்டுச்செல்வது!


நாவால்
உயிரறத்து விளையாடும்
சொன்னதை சொல்லும் கிளி ஒன்று

ஒரு பொழுதும் நம்பாதிருந்தது
அவனுடனான உறவையும்
சூழலையும் சுற்றத்தையும்

ஏதோ ஒரு பொழுதில்
நிகழ்ந்திடும் சண்டையினை
அடுத்த பொழுதில் தீர்த்திருந்தது

பிணக்குகளின் ஊடே உழலும்
உரையாடல்கள்
மென்று கொண்டிருந்தது நம்பிக்கையை

மழை காய்ந்த ஒரு வெயில் பொழுதில்
விடை பெறுதல் பற்றியும்
வழியனுப்பதல் பற்றியுமான விவாதத்தில்

நாவால்
உயிரறத்து விளையாடும்
சொன்னதை சொல்லும் கிளி சொல்லிக்கொண்டிருந்தது

நீ முன்பு போல் இல்லை!

தாய் தேடல்

Monday, October 29, 2012 | 0 comments »

பெரும் துயரில்
கணக்கும் இதயம்
தேடும் தனிமையை

இச்சூழலில்

எனக்கு நான்
கொடுக்க இயலவில்லை

ஓலமும் கதறலுமாய்
கண்களையும் காதுகளையும்
நிறைக்கும் இவ்வேளையில்

அலைபேசியில் குரல் கேட்கிறேன்
அழ மடியின்று விம்மிப்போகிறேன்
தாயே!


வீட்டின் மூலையில் குவித்திருந்த
வெட்டிய ஆப்பிள் தோல்களின் நடுவே
விதையெடுத்துக் கொண்டாள் பொன்ராணி

மதியம் தாண்டிய வேளையில்
யாவரும் கண்ணுறங்க
நீர் நிரப்பிய குவளையோடு

அடுப்பு குப்பைகளும்
எஞ்சிய பசுவின் சானங்களும் நிறைந்த
கொல்லைப்புரத்தில் விதைத்திருந்தாள்

ஒவ்வொரு மாலையும்
சீறுடை களையும் முன்னமே
நீருற்ற சென்றுவிடுவாள் ஆப்பிள் விதைக்கு

கோழிகள் கிளறிவிடாதிருக்க
காய்ந்த முட்களை
விதைவிழுந்த இடம்படாது போட்டிருந்தாள்

பாட்டிவீடு தங்கிவந்த ஒரு காலையில்
ஆப்பிள் முளைவிட்டிருந்தது
ஆரஞ்சு பதியத்தில் அம்மாவின் அன்பில்!

தனிமை

Monday, October 29, 2012 | 0 comments »


காட்சிப்பொருளாகிப்போன
அவள் விழிகளுக்கு
ஏனோ சுதந்திரமில்லை

நினைத்த நேரத்தில்
நனைத்த இடத்திலெல்லாம்
அழுதுவிட முடியாது

ததும்பிடும் நீரினை
ஒன்றாய் கூடிய உணவு மேசையிலோ
கணவனோடு கூடிய நடைபயிற்சியிலோ

சட்டென உடைத்துவிட முடியாது
கண்களின் சிவப்பானது
பலநூறு கேள்விக்கனைகள்

இதய சுரபி சுரக்கும் நேரத்தினை
என்னவென கனித்திடமுடியாதவள்
விழியுருட்டியபடி

காதுக்குள் இசை சேர்க்கிறாள்
வெடித்து அழ முடியாத உதட்டின் துடிதுடிப்பு
பார்ப்பவர்களுக்கு பாடலின் முணுமுணுப்பு!

நினைவுகள்

Monday, October 29, 2012 | 0 comments »

எந்தச்சூழ்நிலையிலும்
நனைக்கத்வறுவதில்லை

மழைக்கு
மரம் தேடும்பொழுதோ


வெயிலுக்கு
நிழல் தேடும்பொழுதோ

சில்லிடும் உள்ளங்கையும்
உஷ்ணமேற்றும் உடலும்

இலையாய் துளியாய்
அவள் பொழிய பொழிய

ஈரமாய் காய்தலாய்
நான் சருகாய்!

புல்வெளி பனித்துளி
பூ உனை நினைத்து
பறந்திடும் பட்டாம்பூச்சி,

நாணித்தாழ்ந்திட்ட

பொன்மேனி நோக்கி
நடைபழகிடும்...

காற்றினில் நளினம் பழகி
மெல்லிடை அசைந்தாட
உன் பருவமேனி

பரப்பிடும் வாசனையில்
மதிமயங்கி
முயங்கிடும் அப்பட்டாம்பூச்சி...

பூவுனை பருகிட பருகிட
பனித்துளி விழுங்கி
மெல்லமாய் மேலேறிடும்,

கலவி ஓசையில்
சூடேறிய
கிழக்கில் ஒரு ஜீவன்!

அப்பா

Monday, October 29, 2012 | 0 comments »

இஸ்திரி போட்டுத்தரும் வரை
அப்பாவின் கால்பற்றி நிற்கும் காலை
இக்காலையில் இல்லை!

மகளுக்கு மீசை வரையும்

தந்தையும்
மகனுக்கு பூ வைக்கும்
தாயும்
இல்லாத வீடேது!

சைக்கிளின் பின்னமர்ந்தபடியே
அப்பாவிற்கும் குடைபிடிக்கும்
மழைக்காலமும் பால்யமும்
நினைவின் கண்களில்!

அம்மாவின் கதகதப்பும்
அப்பாவின் சட்டையும்
பால்ய காய்ச்சலுக்கு மருந்து!

அம்மாவின் ஒரு வாய் சோறும்
அப்பாவின் எச்சில்தட்டு சோறும்
ஆயுள் அமிர்தம்!

அப்பாவிற்கென
வைத்திருக்கும் தட்டில்
அம்மா சாப்பாடு வைக்கையில்
தெரிகிறது நமக்கான பொறுப்புணர்வு!

கீழும் மேலுமாய்
மாட்டிய சட்டை பட்டனை
அப்பா சரி செய்திடாத
பள்ளி பருவம் ஏது?

அப்பாவிடம் கொட்டு வாங்காமல்
சைக்கிள் பழகிய
பால்யம் ஏது?

தூரத்தில் எழும்
சைக்கிள் கறிச் சத்தம்
பால்ய கசப்பு
இன்று அப்பாவின் நினைப்பு!

மடித்து கட்டிய லுங்கி
இறுகிய பாதம்
உள்ளங்கை சொரரப்பு
தீராக்காதல் அப்பா!

அரிவாள் கைப்பிடியில்
மண்வெட்டி கைப்பிடியில்
ஒட்டிக் கொள்கிறது
அப்பாவுடனான பருவக்காதல்!

சைக்கிள் பயணத்தில்
சக்கரத்தில் கால் நுழைக்காத
குழந்தையில்லை
கலங்கிடாதா அப்பாயில்லை!

அப்பாவின் கைகளில்
நீச்சல் பழகியவர்கள்
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!

லுங்கி கட்டி பழகிடும்
மகன் பார்க்கையில்
அப்பாவும் அசைபோடுகிறார்
பால்யத்தை!

எண்ணையுற்றி வளர்க்கும்
மீசையில் வளருகிறது
அப்பாவின்மேல் காதலும்!

சொல்லப்படாத காதலில்
அப்பாவும் மகனும்!

நிழல் தொடரும்
குழந்தை
வெய்யில் காயும்
அப்பா!

காதல்

Monday, October 29, 2012 | 0 comments »

அவள் வயதுக்கு வந்த கதையை
தோழியொருத்தியிடம்
முன்னிருக்கையிலிருந்து
சொல்லிக்கொண்டிருந்தாள்

இதழுக்கும் என் செவிக்குமான
நான்கு மைல்கல் இடைவெளியின்
உரையாடல்கள் என்னவாயிருக்குமென
என் இதயத்தோடு போராடிக்கொண்டிருந்தேன்

தன் தோட்டத்துப்பூவென
தோழி நீட்டுகையில் வைத்துவிடச்சொல்லி
சன்னல்வழி தலை திருப்பினாள்
நான் வெளியேறியிருந்தேன் என்னிலிருந்து

பின்பொரு நாள்
முன்னிருக்கையின் பின்பக்கத்தில்
அவள் பெயர் கேட்டிருந்தேன்
முதல் பக்கத்தை விரித்து மூடினாள்

வெள்ளை ரோஜா ஒன்றின்
மொட்டவிழ்த்து இதழ் இதழாய்
அவள் பெயரும் என் பெயருமாய்
இதயம் வரைந்து நீட்டியிருந்தேன்

அவளின் மதிய உணவுப்பாத்திரத்தில்
நீந்திய ஜோடி மீன்கள்
என் தொட்டியில் எழுப்பும் நீர்குமிழ்கள்
அவளது முகமாவே தெரிந்தது!

தூங்கும் நம் மகளின்
தலை வருடல்

மதிப்பெண் சான்றிதழின்
கையெழுத்து

அலைபேசி தொடுதிரையின்
பெருவிரல் வருடல்

வார்த்தைக்காக காத்திருக்கையில்
கடிபடும் பேனாவின் மறுபக்கம்

ஈரக்கூந்தலை சிக்கெடுக்கையில்
நீ வாங்கும் திட்டு

கண்ணாடி தாங்கி நிற்கும்
ஸ்டிக்கர் பொட்டு

எட்டாப்பொருளை
எடுக்கமுனைகையில்
மேலுந்தும் பாதம்

சமைக்கையில் சூடுபட்டு
எச்சில் தேடும் விரல்

உலை கொதிக்கையில்
நசுங்கும் முதல் பருக்கை

முதல்வாய் சோற்றின்
தேடல்

உள்ளங்கை ரசத்தின்
உச்சு கொட்டல்

தும்மல் வருகையில்
உதிர்க்கும் பெயர்

பூத்தொடுக்கையில்
விழும் முதல் முடிச்சு!

நெஞ்சுக்குழியில் நனையும்
தாலி

ஆடை உலர்த்துகையில்
எழும் சாரல்

ஆடை மாற்றத் தாழிடும்
கதவின் கொக்கி

தலை வகிடின்
பொட்டு

உதடுகள் முணுமுணுக்கும்
மெல்லிசை

தூக்கத்தில் அறியாது நிகழும்
உளறல்கள்

படுக்கை விரிப்பின்
கை அலசல்

ஏக்கத்தின்
பிதற்றல்கள்

நள்ளிரவுக்குளியலில்
வழியும் கண்ணீர் துளிகள்!


எதிர்பாராதொரு தருணத்தில்
அகாலமாய்
பொழியத்துவங்குகிறது வானம்

தாய்மடியிலிருந்து நனையும் குழந்தை
சன்னல்வழி யாசிக்கும் மங்கை
மழைக்கு ஒதுங்கும் முதுமை

தொப்பலாய் தென்னையோலை கூரை
துணிக்கொடியிலொரு உள்ளாடை
பாதரசமில்லா வெளிச்சுவர் கண்ணாடி

எரிய மறுக்கும் அடுப்பின் ஈரப்புகை
உடம்பு சிலிர்த்திடும் தெருநாய்
கருவேப்பிலை மரத்திலொரு குயில்

கல்லடிபட்டு பால்வடியும் பப்பாளி
கால்பட்டு உருளும் தெருக்குழாய் குடம்
முனுமுனுக்கும் இல்லத்தரசிகள்

தலைகீழ் ஆடும் கோழி
தெருவெங்கும் உதிரிப்பூக்கள்
தற்கொலை ஊர்வலம்!


தழுதழுக்கும் குரலில் வார்த்தையொன்று
உடைந்து விழுந்தது
ஒருமுறையேனும் புணர்ந்துவிட்டுப்போ

முகம்காட்ட மறுப்பவனிடம்
கூடலின் நிமிடங்களில் உன் முகமே
என்றவளின் கடைசிச்சொல் அது

நலம் விசாரிப்புகளில்
நழுவும் துளிகளை உள்ளடக்கி நீழும்
உரையாடலில் அவள் அவளில்லாதிருந்தாள்

எதிர்வாதம் விரும்பிடாதவள் போல
இதயப்பிரதியினை
தயக்கமேதுமின்றி முன்வைத்தாள்

அவள் காதலை பிரிவின் சூழலை
இயலாமையை அறியாமையை
திணறும் மூச்சில் பரப்பிக்கொண்டிருந்தாள்

முதல் சந்திப்பு முதல் கைகோர்ப்பு
முதல் முத்தம் முதல் கண்ணீர்
முதல் அணைப்பும் நினைவூட்டியவள்

ஞாபகமாய் வைத்திருந்தவைகளையும்
நினைவுத்தணல்களையும் கொட்டியவள்
அவனின் மறுப்பினை விரும்பாதிருந்தாள்

இருவருட மணவாழ்வில் கணவனின்
வெளியூர் பயணம்சொல்லி வீடழைக்கவும்
அலைபேசி துண்டிக்கப்பட்டிருந்தது

திரும்பவும் அழைக்கையில்
தவறவிட்ட காதலியிடமிருந்து
தொடர்பு எல்லைக்கு அப்பாலிருந்தான்!

Blogger Wordpress Gadgets