Pin It

Widgets

அவள்
எச்சில் தெறிக்கும்
கன்னத்து முத்தம் தொடங்கி

கலைந்திட்ட போர்வையினை
கரைதள்ளி
மார்பினை தலையணையாக்கி

இடை சேர்ந்த விரல் பிரித்து
கேசத்தில் நுழைத்து
தேகத்திலொரு பயணம்...

இங்கொன்றும் அங்கொன்றுமாய்
குவித்திட்ட முத்தத்தத்தில்
தாழ் திறந்த தாமரையால்

நீட்டித்த நரம்புகளை
ஆழத்தில்
திணித்திட முயலுகிறது ஒரு வேகம்

தாகத்தில் உதிர்ந்திட்ட
தாளத்தில் அறை தொட்ட
ராகத்தின் முடிவில்

உயிர் கொண்டு திரளும்
வெள்ளை மேகத்திற்கு
அவளெனும் நிலவே துணை!


3 comments

  1. விச்சு // May 1, 2012 at 8:27 AM  

    கவிதையின் அர்த்தமும் ஆழமும் புரிகிறது. கலக்கலான ரொமாண்டிக் கவிதை.

  2. Unknown // May 3, 2012 at 10:09 AM  

    என்னுடைய கவிதையும் உங்களின் வலைச்சரத்தில் இடம் பெற செய்து என்னை திக்குமுக்காட வைத்த உங்களுக்கு நன்றி கணேஷ் சார்

  3. Unknown // May 3, 2012 at 10:11 AM  

    நன்றி விச்சு சார்

Post a Comment

Blogger Wordpress Gadgets