Pin It

Widgets


நிலவின் துணையோடு
காணும் பிம்பமொன்று
மனித உருவத்தில்
இருப்பதாய் திரும்ப திரும்ப
பார்க்கிறான்

வெள்ளை நிற ஆடை
உடுத்தியிருப்பதாகவும்
முன்னோக்கி வருவதாகவும்
மீண்டும் மீண்டும்
நடுக்கத்தோடு பார்க்கிறான்

வழி நெடுங்கிலும்
சிறுவயதில் அவன் கேட்ட
பேய்களின் பெயர்களை
உருவத்தோடு ஒப்பிட்டு நடக்கிறான்

எவைகளோடும் பொருந்தாத
அப்பேய்களெல்லாம்
மறுநாள் மதியம் உணவு சேர்வையில்
முருங்கை இலை கூட்டாயிருக்க,
 நாளை இரவே-அவன்
வேறொரு உருவம் காணலாம்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets