Pin It

Widgets


இடது காது மட்டும்
கருப்பாய் இருக்கிற
வெள்ளைக் கரடிபொம்மை தான் பிடிக்கும்
இவளுக்கு...

அதன் கண்கள் மீது
அதிகமாய் பிரியம் என்பதால்
குளிக்கும் போது,
கூட எடுத்துச் செல்வாள்
ஆனால் கண்ணைக் கட்டி விடுவாள்

படுக்கையறையிலிருந்து
வரவேற்பரை வருகையில்
யாருக்கும் தெரியக் கூடாதென
மறைத்து வைப்பவள் பிற்பாடு,

இவளது அறை
உஷ்ணப் படும் அளவிற்கு
விரல்களால் வருடிய படி
ஏதேதோ காதல் மொழி பேசுவாள்

இவளையும் அறியாமல்
நகம்பட்டு முடி உதிர்ந்தால்
தன் உடலிலும் கிழித்துக் கொள்பவள்
திடுமென அலறல் சத்ததோடு உறங்கிப் போவாள்

சுக்கல் சுக்கலாய்
கிழித்துப் போட்ட கரடி பொம்மையை
அப்புறப் படுத்திவிட்டு
நேற்று வாங்கி வந்ததை
இவள் அருகில் கிடத்தியபடி,

நாளைக்கான
இடது காது மட்டும் கருப்பாய் இருக்கும்
அந்த வெள்ளைக் கரடி பொம்மையை
கடைகளில் தேட ஆரம்பிப்பார்
இவளது அப்பா!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets