Pin It

Widgets


பெய்து கொண்டிருந்த மழையானது
புள்ளிகளாக விழுந்து
கோடுகளாக வடிந்து கொண்டிருந்தது
சன்னல் கண்ணாடியில்

மழையின் சங்கீதம்
கேட்டபடி என்னவளின்
தோடு ஆடிக்கொண்டிருக்க,

கையில் நழுவும் கொசுவத்தை,
தனக்கான ஆசையை
இடையில் சொறுகி
தேனீர் பருகிய படி
மழை ரசித்துக் கொண்டிருந்தாள்

குரலுக்கு செவி சாய்க்காது
அவள் அருகில் வர வேண்டி
எனக்கான அறிவிப்பினை
பார்வையில் வலை விரித்தாள்

கன்னம் கிள்ளி-என்
மூச்சில் கூந்தல் அசைத்து
இடையில் விரல் கோர்க்க
மோகம் தூரல் போட்டது ..

முடிந்து வைத்த ஆசைகளை
விரல் சொறுகி அவிழ்த்தெடுக்க
வானம் மின்னலிட
மறைத்தாள் திரைச்சேலையை

என் கைகளில் ஏறியவள்
கெண்டைக் கால்
கொலுசொலி எழுப்பி
தொப்பென விழுந்தாள் கட்டிலில்

மழையென நனைந்த
வியர்வைத் துளிகள்,
இசையென ரசித்த முனங்கல்கள்
பின்பொரு கவிதையில்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets