Pin It

Widgets

சாவியற்று
தாழ்பாள் ஆகும்-நீ
உள்ளிருந்து திறப்பதினால்

சுவற்றின் பார்வை தப்பி
முகமோ முன்னழகோ
காட்சியாகும்
கண்களுக்கு

சட்டைப்பொத்தான்கள்
தவிர்த்து அவிழலாம்
உள்ளாடை ஊக்கு

சுவர் தாங்கி
கழற்றப்படும் காலணிகள்
இனி உன் தோள் தாங்கி

சட்டையின்
முதல் பொத்தான் என்னாலும்
மூன்றாம் பொத்தான்
உன்னாலும் அவிழும்

துவைக்காத
பூத்துவாலை தவிர்த்து
உன் ஆடையில்
முகம் துடைப்பு

அடுக்களை மேடை
இருக்கையாகும்-நீ
தேநீர் தரும்வரை

ஆவி பறக்கும்
கோப்பையில் ஆடைவிழ
சமையலறை பள்ளியறை

உதிர்ந்த பொட்டு
உலர்ந்துபோக
அலமாறியிலேறும்
சேமிப்புகளாக

அலங்கோலமாய்
இருந்த அறை,
அங்க கோலத்தில்
நின் வருகையில்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets