Pin It

Widgets

தீபாவளி

Saturday, February 21, 2015 | 0 comments »

முதுகெட்டாத இடத்திலும்
தலையினுள் இறங்கவென
எண்ணெய் இறுக்கித்தேய்க்க
அருகில் அன்னையில்லை

வெடிமருந்து கையோடு
முறுக்கெடுக்காதே என
பானை திறக்கும் ஓசை கேட்டு

துரத்துவதற்கு
பானையுமில்லை முறுக்குமில்லை

கிணறோ குளமோ
கூட சேர்ந்து குளிப்பதற்கு
ஊரில்லை
அருகில் நண்பர்களுமில்லை

தெருவெங்கும் காகிதம் நிரப்ப
போட்டிப்போட
பக்கத்து தெருவுமில்லை

நச்சரித்து பணம் வாங்க
அருகில்
அப்பாவும் இல்லை

புது சட்டை
ஓட்டையாக்கிடாதேவென
எச்சரிக்க ஆளில்லை
புது சட்டையுமில்லை

இறைச்சிக் கறியென
வட்டமாய் அமர்ந்து
ஒன்றாய் சாப்பிட

அகலமான தரையுமில்லை
பரிமாற அன்னையில்லை
சோறு வைக்க தட்டுமில்லை

நுரைபொங்க குளிக்கும்
செயற்கை அருவியில்
தலைகுப்புற விழுந்தது
யாரென அறியுமுன்

தாழிட்ட கதவென அறிந்தும்
தட்டத்துவங்கிவிடுகிறான்
அலுவலகம் போக நேரமாகிறது

வெளியே வாவென்று

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets