Pin It

Widgets

பிரசவிக்கும்வரை
மார்பினில்
சுனையூறும் பால்

பிறந்த குழந்தையின்
முதல் அழுகைக்காக
அமைதியிலிருப்பது

கக்கத்தில் கிடத்தி
முலைப்பாலை
உறிஞ்சுவது

தலை தாங்கும்வரை
காத்திருந்து தகப்பன்
கையிலெடுப்பது

கால்களுக்குள் உழன்று
அப்பாவின் தோளிலேறி
திருவிழா பார்ப்பது

அக்குள்வாசனை நிறைந்த
அப்பாவின் சட்டையணிந்து
அம்மாவின் சேலைபோர்த்தி
துயில்வது

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets