Pin It

Widgets

எண்ணெய் தலையென
மடிசாய மறுத்து அவள்
என்னைத் தேயென அவன்

பூட்டிய குளியலரையில்
ஷாம்பு வேண்டி அவள்
சேர்ந்து நனைய அவன்

நடு முதுகின்
ஈரம் துடைக்க
திரும்பி நிற்பாள் அவள்
முத்தம் பதிக்க அவன்

ஈரத்தலையென
பூத்துவாலை வேண்டி அவள்
உதடு நனைக்க அவன்

சீப்பினில் சேர்ந்திருக்கும்
உதிர்ந்த முடிகளை அகற்ற
வாரப்படாத கூந்தலோடு அவள்
விரல் நுழைக்க அவன்

உடுத்தியிருக்கும்
ஆடையில்
பிசிர் தட்டும் நூலை
கத்தரிக்க வேண்டி அவள்
கடித்து எடுக்க அவன்

நேரம் கடக்கிறது என
வெளியில் தள்ளி
தாழிடுவாள் அவள்
அனுமதி வேண்டி
வெளியே தாழிடுவான் அவன்

அவசர அவசரமாய்
உணவெடுப்பாள் அவள்
அவளை
உணவாக்கத்துடிப்பான் அவன்

வில்லங்கம் ப்டித்தவனென
செல்லமாய் திட்டுவாள் அவள்
விடுப்பு எடுக்கச்சொல்வான் அவன்

ஒரேயொறு முத்தமென
வாசலின் வெளிப்பக்கம் அவள்
ஒரேயொரு மொத்தமென
உள்பக்கம் நிற்பான் அவன்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets