Pin It

Widgets

துரோகங்கள்

Saturday, February 21, 2015 | 0 comments »

விரலிடுக்கின் தசையறுத்து
அகலப்பிடித்துப்பார்க்கிறேன்

யூகத்தில் தப்பிய இடைவெளியில்
முளைத்த முகத்தின் முட்கள்

பரிதாபத்தின் சாயலில்
பூத்துக்கிடக்கிறது வனமெங்கும்

விழிமூடிச்செல்லவோ
திசைமாறிக்கொள்ளவோ முடியாது

வடிந்து கொண்டிருக்கும் குருதி
உறைய உறைய

அகலப்பிடித்துப்பார்க்கிறேன்
திட்டு திட்டாய் துரோகங்கள்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets