Pin It

Widgets

உரையாடல்

Saturday, February 21, 2015 | 0 comments »

நானும் நீயும்
சேர்ந்தது தான்
நான்

அழனும் போல இருக்கு
நெஞ்சில் முகம் புதைத்து அழு

சிரிக்க வையேன்
உப்புமூட்டை ஏறிக்கொள் தலைகீழ் கவிழ்ப்பதுபோல் கவிழ்க்கிறேன்

கோவமா இருக்கேன்
தோளில் கடித்துவைக்கிறேன் ஆசைதீர துரத்தி துரத்தி அடி

கொஞ்ச தூரம் நடக்கலாமா?
கால்மேல் ஏறிநில் வீட்டிற்குள் ஒரு சுற்று சுற்றலாம்

தூக்கம் வரலியே
விரல்கள் நீட்டு சொடுக்கெடுக்கிறேன்

தலவலிக்குதுடா
தரையிலிரு சோபாவில் நானிருந்து நெற்றி உருட்டுகிறேன்

எதாவது சொல்லேன்
திருமணம் முடிந்த மறுநாள் ஆடைமாற்றுகையில்
தடாலென கதவை தாழிட்ட வெட்கமுகம் வர்ணிக்கிறேன் கேள்

இன்னைக்கு சமைக்கமுடியாதுபா வலிக்குது
மடியில் கால் நீட்டி அமர்... சமைத்தூட்டுகிறேன்

எங்க அப்பா நெனைப்பா இருக்கு
கட்டிலில் படு... மென்பாதம் கண்ணத்தில் வைத்து முத்தமிடுகிறேன் இளைப்பாறு

மடில படுத்துக்கட்டா
உதட்டால் வகிட்டு குங்குமம் எடுத்து திருஷ்டி பொட்டிடுகிறேன். அம்மாவிற்கு அழைத்துப்பேசு

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets