Pin It

Widgets

இரு கைகள்
உரசுவது போய்
நாற்கரங்களாகிறது

கட்டில் நனைய
சாத்தப்படும் சன்னல்கள்
திறக்கப்டுகின்றன

கடைக்குள் ஒதுங்கும்
உடல் குடைக்குள்
நனைகிறது

நிறுத்தப்படும்
மின்விசிறி சுழலும்
அணைக்கப்படுவது நீ

உச்சுக்கொட்டவோ
பாடல் முணுமுணுக்கவோ
உதடுகள் தனித்திருப்பதில்லை

உலரும் துணிகளை
எடுக்க விரைந்து
நனையும்
உடுத்திய ஆடைகள்

கொரிப்பதற்கு
தேடும் மனம்
கடிப்பதற்கு கண்ணம்

சில்லிடும் மேனி
மூடிடும் போர்வை
கட்டிலின் கீழ்

மின்னலென விழிமூடிட
மின்சாரம் பாயுது
உடல் கூடிட

மழைக்கு
தவளைச்சத்தம்
அறைக்கு
அவரவர் யுத்தம்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets